புளியங்குடியில் ரோட்டரி மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்ட தொடக்க விழா

தென்காசி, பிப். 21: ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில்   செயல்பட்டுவரும்  அனைத்து மாவட்டத்திலும் அன்னதான திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்டம் தொடக்க விழா, நேற்று முன்தினம் புளியங்குடி டி.என்.புதுக்குடி ஆர்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி மாவட்டம் அன்னதான திட்ட சேர்மன் பாலாஜி கிரானைட்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அன்னதான திட்டத்தை ெதாடங்கி வைத்து பேசியதாவது: மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்டத்தை ரோட்டரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. மேலும் பாலாஜி கிரானைட்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் புளியங்குடியில் அன்னதான திட்டத்தை வழங்குவது சிறப்புக்குரியது, என்றார்.

விழாவில்  புளியங்குடி ஆர்சி சர்ச் பங்குத்தந்தை அருள்ராஜ், புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ், புளியங்குடி ரோட்டரி சங்க பட்டய தலைவர் காஜாமுகைதீன், மாவட்ட செயலாளர் சிதம்பரம், அன்னதான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அமல்ராஜ், புளியங்குடி ரோட்டரி சங்க தலைவர் குணசேகரன், செயலாளர் அய்யாதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் பட்டய தலைவர் கனகசபை, ராதாகிருஷ்ண ராஜா, முன்னாள் உதவி ஆளுநர் மாரிமுத்து, புளியங்குடி ரோட்டரி சங்கம் சாமி, வெங்கடேசன், தலைமை ஆசிரியர் மாரியப்பன், சுந்தர், முகமது யூசுப், தங்கம், இசக்கி, அலாவுதீன், வக்கீல் பிச்சையா,  ஆறுமுகசாமி மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-  மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>