காயல்பட்டினம் வாலிபர் மர்மச்சாவு

நெல்லை, பிப்.21: ஆறுமுகநேரியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராஜா(27). இவர் நெல்லை ரெட்டியார்பட்டி அருகே இட்டேரியில் ஒரு வீட்டில் 10 தொழிலாளர்களுடன் தங்கியிருந்து அப்பகுதியில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ராஜாவை பார்க்க காயல்பட்டினத்தைச் சேர்ந்த லிங்கம் மகன் சுடலைமுத்து(23) வந்தார். இரவு அங்கேயே தங்கினார். நேற்று அதிகாலை 5 மணியளவில் ராஜா எழுந்தபோது, சுடலைமுத்துவை காணவில்லை. அவரை தேடியபோது அங்குள்ள கிணற்றில் சுடலைமுத்துவின் உடல் மிதந்தது.தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார், பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து சுடலைமுத்துவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுடலைமுத்துவின் சித்தப்பா செல்வராஜ்(60), அளித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>