×

பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற உடுமலை திருப்பதி கோயிலில் சிறப்பு யாகம்

உடுமலை,பிப்.21:உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் உயர் மதிப்பெண் பெற்று முதலிடம் பெறும் வகையில், லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடந்தது.இந்த யாகத்தில் 2500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேனா, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
யாகத்துக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags : Udumalai Tirupati Temple ,election ,
× RELATED இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு...