×

உடுமலை பேருந்து நிலையத்தில் பயனற்று கிடக்கும் குடிநீர் தொட்டி

உடுமலை, பிப். 21:உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர்.பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாக இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. பைப் உடைந்து கிடக்கிறது.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியில் 4 குழாய்கள் உள்ளன. இதில் மூன்று பழுதடைந்துள்ளன. ஒன்றில் மட்டும் அவ்வப்போது தண்ணீர் வருகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கோடை துவங்கும் முன்பே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. இதனால் பயணிகளும், டிரைவர், கண்டக்டர்களும் குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். கோடை துவங்கும்போது, குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே, இப்போதே நகராட்சி நிர்வாகம் தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் நிரப்ப வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியில் 4 குழாய்களிலும் தடையின்றி குடிநீர் வரச் செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Udumalai ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை