×

இருவருக்கு டெங்கு காய்ச்சல் மருத்துவமனையில் சிகிச்சை

திருப்பூர், பிப்.21:திருப்பூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்குவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனாலும், மாநகரில் முழுவதுமாக டெங்கு காய்ச்சல் குறைந்துவிட்டது என சொல்லிவிட முடியாது. அவ்வப்போது திருப்பூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்கும் சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரியாண்டிபாளையம், மங்கலம், அவிநாசி பேகம்பாளையம் மற்றும் வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,  இரு பெண்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர். இதையடுத்து 5 வயது ஆண் குழந்தை மற்றும் 29 வயது இளைஞர் ஆகிய இருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags :
× RELATED கொரோனா பிடியில் தூத்துக்குடி.:இன்று...