×

பந்தலூரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி

பந்தலூர், பிப். 21: பந்தலூரில் கோரோனா வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பந்தலூர் அருகே கூடலூர் அரசு கலை கல்லூரி நாட்டு நலபணி திட்டம், நெல்லியாளம் நகராட்சி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் கோரோனா வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சைலஜா தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு பேசுகையில், கோரனோ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்து கூறி சுத்தமாக, சுகாதாரமாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணி பழைய பஸ் நிலையம், அரசு மேல் நிலை பள்ளி, வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது.பேரணியை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து துவக்கி வைத்தார்.நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் விளக்கம் அளித்தார். தொடர்ந்து வருவாய் அலுவலர் அலுவலகம், மாரியம்மன் கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மை படுத்தினார்கள். முகாமில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கார்த்திக், சிவசங்கரன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Coronavirus virus awareness rally ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி