×

கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 20 ஆயிரம் மலர் தொட்டிகள்

குன்னூர்,பிப். 21: கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவர குன்னூர் சிம்ஸ் பூங்கா முழுவதும் 20 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.குன்னூரில் தோட்டகலைத்துறை கட்டுபாட்டில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் உள்ளது. கோடை சீசனுக்காக குன்னூர் சிம்ஸ் பூங்கா தற்போது தயாரகி வருகிறது. மேலும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா நிர்வாகத்தினர், பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது பூங்காவில் புதிதாக 20 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொட்டிகளில் வெளிநாட்டு மலர்களான மேரி கோல்ட், பிரெஞ்ச் மேரி கோல்ட், ஆப்ரிக்கன் மேரிகோல்ட், பெட்டோனியா, ஆஸ்டர், செல்லோஷியா போன்ற 15க்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை பூங்கா மற்றும் கண்ணாடி மாலிகையில் அலங்கரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தாண்டு மே மாதம் நடைப்பெற உள்ள பழக்கண்காட்சியின் மலர்கள் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவிலான மலர் செடி வகைகள் வைக்கப்பட்டுள்ளதால் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Coonoor Sims Park ,
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயாராகிறது