×

தீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

ஈரோடு, பிப்.21: ஈரோட்டில் தீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் க்யூ பிராஞ்ச் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. ஈரோடு தீயணைப்பு நிலையம் பின்புறத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டன. இதில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திறப்பு விழாவுக்காக பூட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தீயணைப்பு வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பினை திறந்து வைத்தார். அதன்பின், ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புக்கு குத்து விளக்கு ஏற்றினார். இவ்விழாவில், பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த குடியிருப்பில் 12 வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்க விரைவில் வீடு ஒதுக்கீடு செய்து இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு வரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.இதேபோல், ஈரோடு ஆணைக்கல்பாளையம் அருகே போலீசாரின் க்யூ பிராஞ்ச் அலுவலகத்தினையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தினை ஈரோடு எஸ்பி சக்திகணேசன் நேற்று காலை பார்வையிட்டு, போலீசார்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Tags : Apartments ,firefighters ,
× RELATED குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலர்களை எரித்தவர்களுக்கு வலை