பெரணமல்லூர் அருகே வியாபாரி வீட்டில் திருட்டு

பெரணமல்லூர், பிப்.21: பெரணமல்லூர் அருகே சவுக்கு வியாபாரி வீட்டின் கதவை எரித்து பணம் மற்றும் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மார்கபந்து. இவரது மகன் ரமேஷ்(40) அரிசி மற்றும் சவுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் ஆரணியில் வசித்து வருகிறார். தினமும் காலை முனுகப்பட்டில் உள்ள வீட்டுக்கு வந்து வியாபாரம் செய்துவிட்டு இரவு ஆரணிக்கு சென்று விடுவார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு ஆரணிக்கு சென்று நேற்று காலை 11 மணி அளவில் முனுகப்பட்டு வந்தார். பின்னர், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பின்புற கதவு எரிக்கப்பட்டு, திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, அங்குள்ள மேஜையின் டிராயரில் வைத்திருந்த ₹25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், வீட்டில் வியாபாரத்திற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகள் 4 மற்றும் காலி சிலிண்டர், வீட்டு பத்திரம் போன்றவை திருட்டு சென்றதும் தெரிந்தது.இதுகுறித்து, பெரணமல்லூர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>