×

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு

குடியாத்தம் பிப்.21: குடியாத்தம் அடுத்த வலசை கிராமத்தில் தொல்லியல் துறை சார்ந்த அகழாய்வு பணி கடந்த 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடந்தது. இவை இன்றுடன் நிறைவுபெற்றது.சென்னை பல்கலைகழக தொல்லியல் துறை முதுக்கலை மாணவ, மாணவிகள் 21 பேர் கொண்ட குழு நடத்தி வந்த அகழாய்வின் போது சென்னூர்மலை பகுதியில் புதிய கற்கால நாகரீகம் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் ஆன கருவிகள், பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், இரும்பை உருக்க பயன்படுத்தப்படும் மண் குழாய்கள் என பல்வேறு பொருட்களாக வகைப்படுத்தி அத்தனை பொருட்களையும் மேற்கொண்டு ஆய்வுக்காக சென்னை பல்கலை கழக ஆய்வகத்திற்கு கொண்டு செல்வதாக ஆராய்ச்சி குழு தெரிவித்தது. ஆய்வை நிறைவு செய்யும் வகையில் இன்று சென்னை பல்கலை கழக தொல்லியல் துறை தலைவர் முனைவர் சவுந்தர்ராஜன் அகழ்வு பணியை நேரில் பார்வையிகிறார்.மேலும் அகழ்வு பணிக்காக தோண்டப்பட்ட குழி மற்றும் பள்ளங்களை நேற்று முறைப்படி வரலாற்று ஆர்வலர்களின் உதவியுடன் மூடப்பட்டது.

Tags : Madras University ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை...