×

சேதுபாவாசத்திரம் அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது

சேதுபாவாசத்திரம், பிப். 21: சேதுபாவாசத்திரம் அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.சேதுபாவாசத்திரம் அடுத்த பெருமகளூரை சேர்ந்தவர் புதியராஜா (42). இவர் அதே பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் அப்பகுதியில் குற்றப்பிரிவு தனிப்படை எஸ்ஐ தென்னரசு தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெருமகளூர் அருகே உள்ள கள்ளாம்பரை ஏரிக்கரையில் மதுபாட்டில் விற்பனை செய்த புதியராஜா பிடிபட்டார். இதையடுத்து அவரிடமிருந்து 75 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து புதியராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sethupavasatram ,
× RELATED சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில்...