×

மோட்டார் விதிமுறையை மீறி வைக்கோல் ஏற்றி செல்லும் வாகன டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை

தஞ்சை, பிப். 20: தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனம் சரக்கு வாகனங்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 396ன்படி வாகனத்தின் உயர அளவு தரையிலிருந்து வாகனத்தின் ஏற்பட்டுள்ள சரக்கின் உயரம் 3.8 மீட்டர் உயரம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

அதற்கு மேல் ஏற்றப்படும் வாகனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தஞ்சை பகுதியில் அதிக சரக்கு வாகனங்கள் வைக்கோல்களை அதிக பாரம் ஏற்றும்போது அனுமதிக்கப்பட்ட உயரத்தை பின்பற்ற வேண்டும். மேலும் வைக்கோலை பண்டில்போல் சுற்றி ஏற்றவும் அறிவுறுத்தப்படுகிறது. இதில் விதிகள் மீறப்பட்டால் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதர சாலை பாதுகாப்பு அம்சங்களாகிய சிகப்பு பிரதிபலிக்கும் பட்டைகள், ஒட்டப்படும் பிரேக் லைட், முகப்பு விளக்கு அனைத்தும் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்து வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags : motorists ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...