×

கட்டிமேடு ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டி, பிப்.20: திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி சார்பில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், தலைமையாசிரியர் பாலு முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்கியராஜ் வரபேற்றார். ஊராட்சி அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்திரா வெள்ளைச்சாமி, சரஸ்வதி ராமகிருஷ்ணன், ஜமாத் மன்ற நிர்வாக குழு உறுப்பினர் ஜெகபர் மற்றும் வார்டு உறுப்பின்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே துவங்கி முக்கிய வீதிகள் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும், சுகாதாரம், பிளாஸ்டிக்கை தவிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Tags :
× RELATED ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு...