×

மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்களுக்கு நலஉதவி

திருத்துறைப்பூண்டி, பிப்.20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. மன்னார்குடி ஆர்டிஓ புண்ணியக்கோட்டி தலைமை வகித்தார்.
இம்முகாமில் பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டதோடு அரசின் சமூக நலத்துறை, வட்ட வழங்கல் துறை, வேளாண் துறை, சமூக பாதுகாப்பு துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்டவைகளின் மூலம் முதியோர் உதவித்தொகை , இலவச காய்கறி விதைகள், ஊனமுற்றோர் உதவித்தொகை , ஆதரவற்றோருக்கான உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டம் ரூ 8, 211,326 மதிப்பிட்டில் 54 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் தாசில்தார் ராஜன்பாபு, துணை தாசில்தார் செந்தில்குமார், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் முகம்மது சாதிக், வேளாண்மை துணை அலுவலர் ரவி, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஜெகதீசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜாமணி, நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மணிவண்ணன், வேளாண்மை உதவி அலுவலர்கள் மகேஷ், ரமேஷ்குமார், மகர ஜோதி, சிவரஞ்சனி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மன்மதன், கோபால்ராமன் மற்றும் கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர் மேனகா, துணைத்தலைவர் ரம்யா ஐயப்பன் , மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் ரமாகுமார், நுணாக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன், விஏஓ முருகானந்தம் மற்றும் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : public ,Public Interview Camp ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...