×

சிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது

திருவெறும்பூர், பிப்.20: திருவெறும்பூர் அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போஸ்கோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் அங்குராஜ், பஸ் கண்டக்டர். இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் அங்குராஜ் வெளியூரில் வசித்து வந்தார். இவரது உறவினர் ரமேஷ்(45), பெயின்டிங் கான்டிராக்டர். இவரது வீட்டில் அங்குராஜ் தனது மகள் பத்மாவை(8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி பயில்வதற்காக விட்டுவைத்திருந்தார். பத்மா, ரமேஷ் வீட்டில் தங்கி திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில ரமேஷ் உமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது பற்றி பத்மா பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி தலைமையிலான போலீசார் ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED போலீசார் மறுத்ததால் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பீகார் பெண்