மேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடை திறப்பு

திருச்சி, பிப்.20: பொன்மலை பகுதி மேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடையை திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி மேலகல்கண்டார்கோட்டையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, புதிய பயணியர் நிழற்குடையை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், வட்ட செயலாளர்கள் முருகானந்தம், ரங்கநாதன், வரதன், தமிழ்மணி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories:

>