×

அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் டோல்கேட்டில் போலீஸ் பாதுகாப்பு

மதுராந்தகம், பிப்.20: அச்சிறுப்பாக்கம் அருகே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கலந்து கொள்ள செல்வோரை கண்காணிக்க ஆத்தூர் டொல்கேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று தடையை மீறிய நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ‌விழுப்புரம் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து சென்னை நோக்கி பலரும் செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதனால், மதுராந்தகம் கோட்ட காவல்துறையினர் நேற்று செங்கல்பட்டு மாவட்ட எல்லையை ஒட்டிய ஆத்தூர் டோல்கேட் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் தலைமையில், அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, சித்தாமூர், சூனாம்பேடு, செய்யூர் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை மார்க்கமாக டோல்கேட்டை கடந்து செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர்.நேற்று அதிகாலை முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு பணி, இரவு வரை சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் திரும்பி செல்லும் வரை  தொடர்ந்தது.

Tags : Athur Dolgate ,Aruksuppakkam ,
× RELATED தமிழகத்தில் தனி நபர் எத்தனை பேருக்கு...