×

தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் சோழிங்கநல்லூரில் அரசு பன்நோக்கு மருத்துவமனை

சென்னை, பிப்.20: சோழிங்நல்லூரில் தீயணைப்பு நிலையம் மற்றும் அரசு பன்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என திமுக உறுப்பனர் அரவிந்த் ரமேஷ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உறுப்பினர்கள் 15 நிமிடங்கள் பேச வேண்டும் என சபாநாயகர் தனபால் கூறினார். அதன்பேரில், அதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 15 நிமிடங்களுக்குள் பேசி முடித்து விட்டனர்.ஆனால், சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரவிந்த் சோழிங்கநல்லூர் தொகுதி 6.6 லட்சம் வாக்காளர்களை கொண்டது. தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி .இது 3 சட்டமன்ற தொகுதிகளை அடக்கியுள்ளது.  எனவே, இந்த தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பேச சபாநாயகர் 40 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்றார்..சபாநாயகர் தனபால்: ஒவ்வொரு தொகுதிக்கும் 5 நிமிடங்கள் வீதம் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. அதற்குள் பேசி முடிக்க வேண்டும் என்றார்.அரவிந்த் ரமேஷ்: ஓம்எம்ஆர் மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் 6 பாலங்களை அகலப்படுத்த வேண்டும். உள்ளகரம் புழுதிவாக்கத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.

இளைஞர்களுக்கான விளையாட்டு திடல் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் வணிக வளாகம் கட்ட வேண்டும். கொட்டிவாக்கம் முதல்  உத்தண்டி வரை மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பன்நோக்கு மருத்துவமனை கட்டிதர வேண்டும். புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் போதிய ஆசியர்களை நியமிக்க வேண்டும். புதைவட கேபிள் அமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். 184, 186, 197, 198 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கும் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Fire Station ,
× RELATED அழகர்கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோயில் ஊழியர்கள் பங்கேற்பு