×

சீனாவில் இருந்து கப்பலில் சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

சென்னை, பிப். 20:சீனாவை சேர்ந்த மாங்கிட் என்ற கப்பல் 19 பேருடன் சென்னை துறைமுகம் வந்தது. அந்த கப்பலில்  சென்னை துறைமுகத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கப்பல் மற்றும் அதில் வந்த அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த குழுவினர் அந்த 2 பேரை பரிசோதனை செய்து. அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சென்றனர். இந்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சீனாவிலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட கப்பல் 14 நாட்களுக்குமுன் சென்னை துறைமுகம் வந்தது. இந்த கப்பலில் வந்த சீன பணியாளர்கள் இரண்டு பேருக்கு, உடல் வெப்பநிலை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி, சுகாதார நடைமுறைகள் பின்பற்ற தொடங்கின. அதன்படி சீன தொழிலாளர் இரண்டு பேரின் ரத்தம், சளி மாதிரிகள் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கொவைட் -19 பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. குறிப்பிட்ட கப்பலில் இருந்து சரக்கு இறக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக சென்னை துறைமுக கழக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவைச் சேர்ந்த இருவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இதன்படி கப்பலில் உள்ள பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த தொடர்ந்து கண்காணிப்படும். அரசு விதிமுறைகளின் படி சீன குழுவினர் தரை இறங்க அனுமதி வழங்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,China ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...