×

கண்டன பொதுக்கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.20: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் அனைத்து சமுதாய மக்களின் பங்கேற்புடன் கண்டன பொதுக்கூட்டம் ஜமாத் தலைவர் அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை உதவி செயலாளர் கமருதீன் வரவேற்று வரவேற்றார். இதில் அனைத்து மதத்தினரும்,பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சந்தானம், தமுமுக மெளலவி தாஹா புகாரி கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், காங். மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்ல சேதுபதி, நகர் செயலாளர் புரோஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Convention ,
× RELATED எச்எம்எஸ் பஞ்சாலை தொழிலாளர் சங்க 87வது மாநாடு