×

வைக்கோல் படப்பில் தீ

மேலூர், பிப். 20: மேலூர் அருகே கிடாரிபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான வைக்கோல் படைப்பில் திடீரென தீப்பற்றியது. இதில் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் தீயில் எரிந்து போனது. தகவல் அறிந்து வந்த மேலூர் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீ மேலும் பராவமல் அணைத்தனர். வழக்குப்பதிவு செய்த மேலவளவு போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சரக்கு வாகனத்தில் தீ