×

தூத்துக்குடியில் ராணுவ தபால் தலை கண்காட்சி

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலக தகவல் பலகையில் ராணுவ அஞ்சல் தலை குறித்த விவரங்கள் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நிரந்தர தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையில் ராணுவ அஞ்சல் சேவை குறித்து வைக்கப்பட்டுள்ள அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் குறித்து பொதுமக்களுக்கு முப்படை வீரர் வாரிய துணை தலைவர் கர்னல் சுந்தரம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும், அந்த தகவல் பலகையில் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ராமநாதன் தனது சேகரிப்புகளான இந்தியா மற்றும் வெளிநாட்டு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறைகளையும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளார்.

Tags : Army ,exhibition ,Thoothukudi ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...