×

பள்ளி மாணவிதற்கொலை

வாடிப்பட்டி, பிப்.20: வாடிப்பட்டி நீரேத்தான் கிராமம் எல்.புதூரைச் சேர்ந்தவர்முத்தையா. இவரது மகள் சுவேதா (14). வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதியுற்று வந்த சுவேதா நேற்று வீட்டிற்குள் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சோலைமலை கோயிலில் ஆன்மீக குழுவினர் தரிசனம்