×

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்துள்ளன என மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்தார். காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, மாவட்ட செயலாளர் க.சுந்தர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கடந்த டிச.20ம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் டிச.23ம் தேதி முதல் ஜன.10ம் தேதிவரை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதன்படி அதிமுக வை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அந்த மக்கள் மனதில் புரட்சி எழுந்துள்ளதை தெரிந்துகொண்டோம். குறிப்பாக தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. திமுகவால் தான் நம்முடைய குறையை தீர்க்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றி உள்ளது. அதனால்தான் மக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை எங்களிடம் தெரிவிக்கிறார்கள். மக்களின் எழுச்சி, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகளுக்கு மாற்றாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி கிடைக்கும் என உறுதியாக நம்புவதை அறிந்துகொள்ள முடிந்தது என்றார். அவருடன் எம்பி செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன் ஆகியோர் இருந்தனர்….

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல் appeared first on Dinakaran.

Tags : People's Council Meetings ,Kanchipuram South District ,District Secretary ,K. Sundar ,Kanchipuram ,Village ,People's Council ,
× RELATED நீர், மோர் பந்தல் திறப்பு