×

தூத்துக்குடி அரசு மருத்துவமனை புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை பிரிவில் கலெக்டர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை பிரிவை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.2.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ரூ.14 கோடி மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை கருவி மற்றும் ரூ.2.13 கோடி மதிப்பில் இதயவியல் பிரிவு, ரூ.50 லட்சம் மதிப்பில் சிறுநீரகம் டயாலிஸ் பிரிவு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வருகிற 22ம்தேதி திறந்து வைக்கிறார். இதனை  முன்னிட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, தூத்துக்குடி சப் கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஷ்ஜெபமணி  மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tuticorin Government Hospital Cancer Radiation Treatment Unit ,
× RELATED தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர்...