×

வத்தலக்குண்டுவில் புதிய தாசில்தார் அலுவலக பணி 2 மாதத்தில் முடிவடையும்

வத்தலக்குண்டு, பிப். 20: வத்தலக்குண்டுவில் புதிய தாசில்தார் அலுவலக பணி 2 மாதங்களில் முடிவடையும் என தாசில்தார் யூஜின் தெரிவித்தார்.
நிலக்கோட்டையில் தாசில்தார் அலுவலகம் ஓடுகளால் வேயப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. போதிய
இடவசதி இல்லாததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே வளாகத்தில் உள்ள காலியிடத்தில் புதிய கட்டிடம் கட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் பூமி பூஜை நடந்தது. புதிய கட்டிட பணி முடிவடையும் உள்ள நிலையில் தற்போது தரைக்கு டைல்ஸ் போடுவது, எலக்ட்ரிக்கல்- பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளது.

இறுதி கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து வருவதால் இன்னும் 2 மாதத்தில் புதிய கட்டிடம் திறக்கப்படும் என்று நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து சமூகஆர்வலர் ஜோசப் கூறுகையில், ‘தற்போது உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் அவசரத்திற்கு பயன்படுத்த கழிப்பறைகள் இல்லை. காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் உட்காருவதற்கு இருக்கை வசதி இல்லை. எனவே புதிய கட்டிடத்தில் அந்த குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்’ என்றார்.

Tags : office ,Dasildar ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...