×

தம்மம்பட்டி பகுதியில் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு

தம்மம்பட்டி, பிப்.20: தம்மம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ், 7 ரேஷன் கடைகளும், செந்தாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் 2 ரேஷன் கடைகளும் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடைகளில் கடந்த 2மாதமாக குடும்ப அட்டைகளுக்கு முறையாக பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும், 2 லிட்டர் மண்ணெண்ணைய்க்கு ₹28.20க்கு பதில், ₹30ஆக விற்பனையாளர்கள் வாங்குகின்றனர். மேலும், அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்களை, எலக்ட்ரானிக் தராசுகளில் எடை போடும்போது, அந்த தராசுகளில் பொருள்களை அளக்கப்படும், 140 கிராம் எடையுள்ள கோப்பை வைத்து, அந்த தராசை நியூட்ரல் செய்யாமல், பொருள்களை வழங்குகின்றனர். அதனால், 1 கிலோ எடைக்கு பொருள்களை போடும் போது, நியூட்ரல் செய்யவில்லை என்றால், 1140 கிராம் என எடை அளவு காண்பிக்க வேண்டும். ஆனால், 1000 கிராம் என்றுதான் எடை அளவு காண்பிக்கிறது. இதனால், ஒவ்வொரு முறையும், பொருட்களை அளந்து போடும் போது, சுமார் 140 கிராம் முதல் 150 கிராம் வரை அளவில் மோசடி நடப்பதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Dhammampatti ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...