×

சேந்தமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் ரிக் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

நாமக்கல், பிப்.20: சேந்தமங்கலம் அருகே, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தரிக் வண்டி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா (35). ரிக்வண்டி டிரைவர். இவரது மனைவி கவுரி (24). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக, கவுரி தனது மகனுடன் சென்னை சென்று, அங்கு வசித்து வருகிறார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஜீவா  ஆசைவார்த்தை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவாவை கைது செய்து, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, சிறுமியை பலாத்காரம் செய்த ரிக் வண்டி டிரைவர் ஜீவாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து  நேற்று தீர்ப்பு கூறினார்.


Tags : jail ,
× RELATED டிஜிபி அலுவலகத்தில் எஸ்ஐ உட்பட 10...