×

இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

நாமக்கல், பிப்.20: தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயரத்தினகாந்தி, கலெக்டர் மெகராஜிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: தமிழக அரசு புதியதாக ஏற்படுத்தியுள்ள ஐஎப்எச்ஆர்எம்எஸ் என்ற இணையதளம் மூலம், ஆசிரியர்களின் சம்பள பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இணையதளத்தில் அடிக்கடி ஏற்படும் கோளாறு காரணமாக, சம்பள பட்டியலை முழுமையாக தயாரிக்கமுடியவில்லை. இதனால் சம்பளம் பெறுவதில் ஆசிரியர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதை சார் நிலை கருவூல அலுவலர்கள் புரிந்து கொள்ளாமல், புதிய இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்தால் தான், சம்பளம் வழங்கப்படும் என கூறி வருகிறார்கள். எனவே, சார்நிலை கரூவூலகங்களில் புதிய இணையதளத்தில் உள்ள குளறுபடிகள் சரி செய்யும் வரை, பழைய நடைமுறையை பின்பற்றி, ஆசிரியர்களுக்கு குறித்த நேரத்தில் மாத சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் பள்ளிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் பள்ளியை விட்டு, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் செல்லும் நாட்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு தனி கம்யூட்டர் வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...