×

நிர்வாக குழு கூட்டம்

குமாரபாளையம், பிப்.20:  குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சேவை அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பினை அரசு அங்கீகாரம் பெற்ற சேவை அமைப்பாக அங்கீகரிக்க வேண்டி அரசிடம் விண்ணப்பிப்பதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அமைப்பின் புதிய தலைவராக மைக்ரோடெக் சீனிவாசன், செயலாளராக பிரபு, துணை செயலாளராக வரதராஜன், பொருளாளராக பழனிசாமி, உதவி பொருளாளராக பண்டிட் சின்னையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Executive Committee Meeting ,
× RELATED 21 நாள் முடக்கத்தை திட்டமிடாமல்...