×

தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி பலி

ஓசூர், பிப்.20: ஓசூரில் குடோன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சோமசேகர்(38), நெசவு தொழிலாளி. இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்த அனைவரும் உறங்க சென்றனர். அதிகாலை எழுந்து லைட் சுவிட்சை போட முயன்றார். அப்போது, பயங்கர சப்தத்துடன் லைட் சுவிட்ச் வெடித்தது. இதில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீப்பற்றி வீடு எரிந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர், காயத்துடன் இருந்த சோமசேகர், அவரது மனைவி ஷீலா (26), குழந்தைகள் புவனகிரி (4), தனியா (5) ஆகியோரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சோமசேகர், ஷீலாவை பெங்களூரு தனியார் மருத்தவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சோமசேகர் பலியானார். ஷீலா மற்றும் 2 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
× RELATED தொழிலாளி மீது தாக்குதல்