×

வேப்பனஹள்ளியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

வேப்பனஹள்ளி, பிப்.20: வேப்பனஹள்ளி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்,கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வேப்பனஹள்ளி பகுதியில் கடந்த சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் சனிக்கிழயைமன்று மின்தடை ஏற்படுத்தப்படாமல் திடீரென்று செவ்வாயன்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.  நேற்று மதியம் வரை மின் விநியோயகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே போதுமான மின்அழுத்தம் இல்லாததால் பேட்டரிகள் கூட சார்ஜ் ஆகாத நிலையில், இவ்வாறு திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பணிகள் முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, மின்நிறுத்தம் செய்வதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Veppanahalli ,
× RELATED மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த...