×

சூளகிரி ஒன்றியத்தில் சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை

சூளகிரி, பிப்.20: சூளகிரி ஒன்றியத்தில் சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.சூளகிரி ஒன்றியத்தில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் சப்ளை தொடர்பான  ஆய்வுக்கூட்டம், சூளகிரி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேமநாத், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஹிரிகான், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷேக் ரஷீத், ஒன்றியக்குழு  துணைத்தலைவர் மாதேஷ்வரன், மாவட்ட கவுன்சிலர்கள் சசிகலா  பாக்கியராஜ், பாபு மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் ராஜசேகர், கல்வியாளர் சப்தமோகன் உள்ளிட்டடோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். இக்கூட்டத்தில், சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 25 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், வார்டு மெம்பர்கள், ஊராட்சி செயலர்கள், வாட்டர் சப்ளையர்கள் கலந்து  கொண்டனர்.கூட்டத்தில் பேசிய உள்ளாட்சி பிரதிநிதிகள், சூளகிரி ஒன்றியத்தில் சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், கோடை காலம் நெருங்கும் நிலையில், குடிநீர் சப்ளை செய்யும் நேரம் குறித்து முறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பேரிகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில்  உள்ள 20 கிராமங்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்யாதது ஏன் என்றும், சில இடங்களில்  குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில் கண்டு கொள்ளாதது ஏன் என்றும் கேட்டு கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்