×

தர்மபுரியில் நாளை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.20: தர்மபுரியில் நாளை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து  மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:  தர்மபுரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (21ம் தேதி) 10 மணிக்கு   கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் ஜிவி  மாதையன் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் நாளை முதல் நடைபெறும் 15வது  திமுக பொதுத்தேர்தல் ஊர் கிளை, உட்கிளை தேர்தல் குறித்தும், மார்ச் 1ம்தேதி  திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்தநாள் நாள் விழா குறித்தும்   விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்நாள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட,  ஒன்றிய, நகர, பேரூர்  செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை  அமைப்பாளர்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : District DMK Executive Committee Meeting ,Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...