×

அரூர் அரசு பள்ளியில் பசுமை படை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

அரூர், பிப்.20: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமைபடை மாணவர்களுக்கு  மதிப்புச்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்  குழந்தைவேலு தலைமை வகித்தார். பிளாஸ்டிக் இல்லா பள்ளி, தூய்மை பணி, சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு,  டெங்கு ஒழிப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி  போன்ற பணிகளை சிறப்பாக செய்து வந்த மாணவர்களுக்கு, பசுமை படை  ஒருங்கிணைப்பாளர் பழனிதுரை, முருகேசன் ஆகியோரை மாவட்ட கல்வி அலுவலர்  பொன்முடி, பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைவேலு ஆகியோர் பாராட்டி பரிசு  மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

Tags : Green Force ,Aroor Government School ,
× RELATED ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பி.சி., சான்றிதழ் வழங்க குழு அமைப்பு