×

பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு, கலந்துரையாடல்

குளித்தலை, பிப்.20: குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலையத்தின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு லாலாபேட்டை யில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குளித்தலை காவல் நிலையத்தில் உள்ள டிராபிக் அவார்னஸ் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.இந்தப் பயிற்சி வகுப்பில் ப்ரொஜெக்டர் மூலம் விபத்து நடைபெற்ற படங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் திரையிடப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு சரியான விளக்கத்துடன் பதிலளித்தார்.

உடன் குளித்தலை காவல் நிலைய தலைமைக் காவலர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் .முடிவில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த போக்குவரத்து பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனளிக்கிறது இந்த பயிற்சி மூலம் எங்களது பெற்றோர்களுக்கும் எங்கள் பகுதி பொதுமக்களுக்கும் இதுகுறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags : Traffic Awareness Workshop for School Children ,
× RELATED ராகுல் - ரகுராம் ராஜன் அசத்தல் விவாதம்:...