×

கரூர் -கோவை சாலையில் சிக்னல் இயங்காததால் வாகன விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், பிப். 20: கரூர்- கோவை சாலையில் சிக்னல் இயங்காததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் கரூரில் இருந்து ஈரோடு, கோவை சாலைகள் பிரியும் இடத்தில் உள்ள சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு, பொள்ளாட்சி, தாராபுரம், திருப்பூர், பல்லடம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூந்துகளும், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியை தாண்டி, இரண்டு பகுதிகளாக சாலைகளில் பிரிந்து செல்கிறது.இந்நிலையில், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் ஒரே சாலையில் கரூரை நோக்கி பயணிக்கிறது.இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் அனைத்து வாகனங்களும் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.

ஈரோடு மற்றும் கோவை பகுதியில் இருந்து கரூர் நோக்கி வரும் வாகனங்கள் ஒரே பகுதியில் இணையும் இடத்தில், கரூரில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் குறுக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, இந்த பகுதியில் அவ்வப்போது வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், அவை இதுநாள் வரை செயல்பாடின்றி உள்ளது. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.

Tags : Karur-Kovai Road ,
× RELATED கரூர் கோவை சாலை சக்தி நகரில் மலைபோல்...