×

ஜங்ஷன் ரயி்ல் நிலையத்தில் முதலுதவி மையம் பூட்டி கிடப்பதால் பயணிகள் அவதி

கரூர், பிப். 20: கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முதல்உதவி மையம் பூட்டிக்கிடப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் ஜங்ஷன் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதல் உதவி சிகிச்சைஅளிப்பதற்காக நிலையத்தின் நுழைவுவாயிலில் முதல்உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையுடன் காணப்படும் இந்த மையத்தின் அறை பூட்டியே கிடக்கிறது. திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் வந்த ஒரு பெண் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்ததும் முதலுதவி மையத்திற்கு கொண்டு சென்றபோது மையம் பூட்டிக்கிடப்பது தெரிய வந்தது. பின்னர் அவரை 108 ஆம்புலன்சை வரவழைத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பூட்டிக்கிடக்கும் மருத்துவ முதல்உதவி சிகிச்சை மையத்தை திறந்து, பயணிகளுக்கு பயன்உள்ளதாக மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,aid station ,Junction Railway Station ,
× RELATED மதுரை கோட்டத்தில் 2ம் இடம் பிடித்தது...