×

ஊட்டி - மஞ்சூர் வழித்தடத்தில் பேருந்து நேரத்தை மாற்றாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி, பிப். 20:ஊட்டி-மஞ்சூர் வழித்தடத்தில் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாலும், நேரம் மாற்றப்பட்டதாலும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மஞ்சூர் பகுதியில் இருந்து நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் ஊட்டி வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாலை நேரங்களில் கைகாட்டி வழித்தடத்தில் ஊட்டியில் இருந்து கீழ்குந்தாவிற்கு மாலை 5.15 மணிக்கு ஒரு பேருந்தும் 6.30 மணிக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இவ்விரு பேருந்துகளிலேயே மாணவர்கள் மற்றும் பயணிகள் சென்றனர். இந்நிலையில், மாலை 5.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த கீழ்குந்தா பேருந்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4.45 மணிக்கு கிண்ணக்கொரை செல்லும் பேருந்து, சென்றுவிட்டால் அதன் பின் ஒன்றரை மணி நேரம் கழித்து கெத்தை பேருந்து 6.20க்கு இயக்கப்படுகிறது.

மேலும், ஒன்றரை மணி நேரம் பேருந்து இல்லாததால் இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் கெத்தை பேருந்துக்காக காத்து நிற்கின்றனர். இந்த பேருந்து பயணிகள் கூட்டதால் நிரம்பி வழிகிறது. இதனால், ஏடிசி., சேரிங்கிராஸ் போன்ற பகுதிகளில் பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் ஏறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாலை 5.15க்கு இயக்கப்பட்டு வந்த கீழ்குந்தா பேருந்து 7.30க்கு இயக்கப்படுகிறது. ஆனால், இந்த பேருந்து வாரத்தில் பல நாட்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், கெத்தை பேருந்து சென்ற பின், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து இரவு 8.15க்கு ேமல்குந்தா செல்லும் பேருந்திலேயே பயணிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பயணிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மீண்டும் கீழ்குந்தா பேருந்தை 5.15 மணிக்கு இயக்க வேண்டும் அல்லது தங்காடு வழியாக மஞ்சூர் பகுதிக்கு இயக்கப்படும் பேருந்தை 5.45 மணிக்கு கைகாட்டி வழித்தடத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போக்குவரத்து கழத்தை வலியுறுத்தியுள்ளனர்.மேலும், ஓரிரு நாட்களில் பழைய நேரப்படி பஸ்களை இயக்கவில்லை எனில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனுக்கள் அளிக்கவும் பயணிகள் மற்றும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : collector ,office ,bus route ,Ooty - Manjur ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...