×

ஓய்வூதியர்களை ஒன்றிணைத்து புதிய அமைப்பு

ஊட்டி, பிப். 20:தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மையத்தின் சார்பில் 12வது அமைப்பு தின கூட்டம் ஊட்டியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லிங்கராஜ், தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் நிர்மலாராணி வரவேற்றார். கோவை மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், குன்னூர் வட்ட கிளை செயலாளர் மணி, மாவட்ட செயலாளர் திவாகரன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். மாநில பொது செயலாளர் கிருஷ்ணன் கலந்துக் கொண்டு பேசுகையில், ஓய்வூதியத்தையும், ஓய்வூதியர்களையும் பாதுகாக்கும் நோக்கில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை அமைப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களை ஒன்றிணைத்து புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

விரைவில் புதிய அமைப்பு மூலம் ஓய்வூதியர்களின் பிரச்னைகள் தொடர்பாக போராட்டங்கள் நடத்துவதற்காகன ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஓய்வூதியர்களை நாம் பாதுகாக்க முடியும், என்றார். கூட்டத்தில், துணை தலைவர்கள் மாதன், ஜெயராமன், ராஜன், கிளை செயலாளர்கள் அந்தோணிசாமி, தில்சாத், ராமசந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பிலிப் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பா நன்றி கூறினார்.

Tags : retirement pensioners ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...