×

புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் மாணவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

கந்தா;வகோட்டை, பிப்.20: கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மூன்றாமாண்டு மாணவர் வினோத்குமார் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ளார். மாணவர் வினோத்குமாரை கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் துறைத்தலைவர்கள், கல்லூரி பொருளாளர் விரிவுரையாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர்.


Tags : New Delhi Polytechnic Student Spear Throwing Competition ,
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது