×

குடியுரிமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடி, பிப்.20: கறம்பக்குடி பகுதியில் தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தொடர் போராட்டங்கள் எதிரொலியாக கறம்பக்குடி மதரஸா பள்ளிவாசல், புலியஞ்சோலை பகுதி பள்ளிவாசல் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்றும், சட்ட சபையில் அனைத்திற்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கறம்பக்குடி குடியுரிமை திருத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு சார்பாக காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளரும், எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார். இந்த தொடர் தர்ணா போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த அம்மாபட்டிணம் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே தொடர் இருப்பு போராட்டம் 4வது நாளாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் அம்மாபட்டிணம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் ஆண்கள் , பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் பாதுகாப்பு பணிகளை கோட்டைபட்டிணம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

Tags : Citizen Protection Coordination Group ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா