×

மயிலாடுதுறை நகராட்சியில் 2 நாள் குடிநீர் நிறுத்தம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரில் புதர்மண்டி கிடக்கும் அவலம்

சீர்காழி, பிப்.20: சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் புதர்மண்டி கிடப்பதால் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தாலுகாவின் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் வெளி நோயாளியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல் உள்நோயாளிகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கிய பகுதியில் புதர்கள் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். நோயை போக்க மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மீண்டும் கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர். சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன்கருதி மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி புதர் மண்டிக் கிடக்கும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drinking water park ,corridor ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...