×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கினர்

வேலூர், பிப்.20: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கினார்.தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி ளியாகும். இந்த 2 வகை தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டரை மணி நேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி 13ம் தேதி முடிந்தது. பிளஸ்1 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு கடந்த 14ம் தேதி தொடங்கி, 25ம் தேதியுடன் நிறைவடைகிறது.அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 369 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் 40 ஆயிரத்து 267 மாணவ, மாணவிகள் 170 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்2 வகுப்பு படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ, மாணவிகள் 170 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

மொத்தம் 80 ஆயிரத்து 798 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மையங்களில் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரி தனியார் பள்ளியில் ெபாதுத்தேர்வு பணிகளில் ஈடுபடும் ேதர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வினாத்தாள் கட்டுப்பாட்டு மைய அலுவலர், வழித்தட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் பரமதயாளன், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.இதில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துணை அலுவலர் பணி, வினாத்தாள் கட்டுப்பாட்டு மைய அலுவலர், வழித்தட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், ேதர்வு மையத்தில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

மாணவர்கள் முழுமையாக சோதனை செய்த பிறகே மாணவர்களை தேர்வு அறைக்குள் அனுப்ப வேண்டும். தேர்வில் முறைகேடுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாள் போக வேண்டும் உள்ளிட்ட தேர்வு தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.இதைதொடர்ந்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2, பிளஸ்1 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 450க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

Tags : Principal Education Officers ,teachers ,district ,Vellore ,election ,
× RELATED சமூக இடைவெளி கடைப்பிடிக்காத...