×

தனியார் பள்ளி ஊழியருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் சவுதி அரேபியா முகவரி

கருங்கல், பிப். 20: குமரி மாவட்டம் புதுக்கடை  அருகே மங்காடு பகுதியை சேர்ந்தவர் நேசையன். மார்த்தாண்டத்தில் உள்ள  தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பால்தங்கம். இவர்  கடந்த நவம்பர் 3ம் தேதி சின்னத்துறை அருகே கடலில் மூழ்கி இறந்தார். நேசையன்  குடும்பம் ஏழ்மையில் வாடி வருவதால், பால்தங்கம் இறந்ததையொட்டி தமிழக  அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக  ஸ்மார்ட் ேரஷன்கார்டு, ஆதார் அட்டை உட்பட ஆவணங்களை ராஜேஷ்குமார்  எம்எல்ஏவிடம் அளித்திருந்தார். அவர் ஆவணங்களை பரிசோதித்தபோது  நேசையனின் ஸ்மார்ட் கார்டில் உள்ள முகவரி அதிர்ச்சியை அளித்தது. அதில் சவுதி  அரேபியா, ம(ஸ்)க்கட், விளவங்கோடு வட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என இருந்தது. ஆனால்  ஆதார் கார்டில் முகவரி சரியாக இருந்தது.ேரஷன்கார்டை ஸ்மார்ட்  கார்டாக மாற்றியபோது தவறுதலாக அச்சுப்பிழை ஏற்பட்டிருக்கலாம் என  தெரிகிறது. இதை நேசையன் வீட்டாரும் முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டனர்.  அதிகாரிகளில் அலட்சியமே இதுபோன்ற குளறுபடிக்கு காரணம் என தெரியவருகிறது.

இதையடுத்து  நேசையன் தனது ஸ்மார்ட் கார்டு முகவரியை ஆதார் கார்டில் உள்ளது போல மாற்றம்  செய்ய கேட்டு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கம்ப்யூட்டரில் தற்போதைய முகவரியான எஸ்டி மங்காடு என மாற்றினர்.  இது குறித்து  மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரிடம் கேட்டபோது, ஆதார் கார்டில் உள்ள முகவரிதான் ஸ்மார்ட் கார்டிலும் வரவேண்டும். ஆதார் கார்டில் இந்திய முகவரியும், ஸ்மார்ட் கார்டில் சவுதி அரேபிய முகவரியும் வந்ததற்கு சென்னையில் பிரிண்ட் நடந்த இடத்தில் தவறு நடந்துள்ளதே காரணமாகும். எங்கள் ஊழியர்கள் தவறு செய்யவில்லை, சம்பந்தப்பட்ட நபருக்கு இங்குள்ள முகவரியில் மாற்று கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Tags : Saudi Arabia ,private school employee ,
× RELATED வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச...