×

வில்லியனூர் மேலண்டை வீதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

வில்லியனூர், பிப். 18: புதுச்சேரி மாநிலத்தின் துணை நகரமாக வில்லியனூர் விளங்கி வருகிறது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் ேகாயில், மாதா கோயில் மற்றும் துணை ஆட்சியர் அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து போன்ற பல அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.  இதனால் எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக வில்லியனூர் இருந்து வருகிறது. இந்நிலையில், வில்லியனூர் நான்குமாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடை மற்றும் விளம்பர தட்டிகள் போன்றவற்றை சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப் உத்தரவின்பேரில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அகற்றப்பட்டது.

வில்லியனூர் மேலண்டை வீதியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில் சாலையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் பலகைகளை வைத்துள்ளார். இதனால் அருகில் உள்ள கோயில், வங்கி, மளிகை கடை போன்றவற்றிற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை விடுவதற்கு இடமில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வாறு மீறி அப்பகுதியில் வாகனங்களை விட்டால் வாகனத்தின் மீது கழிவுநீரை ஊற்றுவதும், தகாத வார்த்தைகளை கொண்டு பேசுவதுமாக தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, உடனடியாக போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Villianur Mainland Road ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...