×

புதுவை சாலைகளை மேம்படுத்த வடிகால் மறுசீரமைப்புக்கு முதல்வர் நிர்வாக ஒப்புதல்

புதுச்சேரி, பிப். 19:  புதுச்சேரியில் சாலைகளை மேம்படுத்தவும், புனரமைப்புக்கும் மற்றும் ‘U மற்றும் “L” வடிகால் மறுசீரமைப்புக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) மூலம் சுமார் ரூ.13.89 லட்சம் பெறுவதற்கும் மற்றும் புதுச்சேரி மாநில பங்காக சுமார் ரூ.2.77 லட்சத்துக்கான நிர்வாக ஒப்புதலை முதல்வர் நாராயணசாமி அளித்துள்ளார். கடந்த காலங்களில் பருவமழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாலைகள் பழுதடைந்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த சாலைகளை தேசிய விவசாய
மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) மூலம் மேம்படுத்தவும், புனரமைப்புக்கும் மற்றும் “U” மற்றும் L வடிகால் மறுசீரமைப்புக்கு முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

இதன் மூலம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பிரதான சாலை, கிருஷ்ணா நகர் பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் பிரதான சாலை, கருவடிக்குப்பம் உட்புற சாலைகள், லாஸ்பேட்டை உட்புற சாலைகள், ஒதியம்பட்டு முதல் அரும்பார்த்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வரையிலான இணைப்பு சாலை மற்றும் லாஸ்பேட்டை கொக்கு பார்க் முதல் மகாத்மா காந்தி ரோடு வரையிலான சாலைகளை மேம்படுத்தவும், புனரமைப்புக்கும் மற்றும் “U மற்றும் “L” வடிகால் மறுசீரமைப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை புதுச்சேரி முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Chief Minister ,roads ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...