×

திருச்சுழி-கல்லூரிணி சாலையில் பாலத்தின் நடுவில் மெகா பள்ளம் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

திருச்சுழி, பிப்.19: திருச்சுழி அருகே பாலத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருச்சுழியிலிருந்து தமிழ்பாடி, மீனாட்சிபுரம் வழியாக கல்லூரணிக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையாக அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் கல்குவாரிகள் அதிகளவில் அமைந்துள்ளதால் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கனகர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ராமசாமிபட்டி கிராமத்திலிருந்து மீனாட்சிபுரத்திற்கு செல்லும் சாலையில் பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் தரமான முறையில் அமைக்கப்படாததால் பாலத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தால் இரவு நேரங்களில் செல்லும் வாகனகள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பின்னர் நூற்பாலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்கள் இப்பள்ளத்தில் விழுந்து வாகனம் சேதமடைந்ததோடு, வாகன ஓட்டிகளும் காயமடைகின்றனர். விரைவில் இப்பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தமிழ்பாடியிலிருந்து கல்லூரணிக்கு குறுக்கு வழியாக செல்ல இச்சாலை பயன்படுகிறது. மேலும் இப்பகுதியில் கல்குவாரிகள் அதிகளவில் உள்ளதால் கனகர வாகனங்கள் எந்த நேரமும் சென்று திரும்புகிறது. ராமசாமிபட்டி அருகே உள்ள பாலத்தில் ஓட்டை விழுந்ததால் பள்ளம் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பெரியளவில் விபத்து ஏற்படுவதற்கு முன் பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென கூறினர்.

Tags : crater crash ,bridge ,road ,College ,Trichy ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...