×

திருவில்லிபுத்தூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், பிப். 19: திருவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாகவும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாகவும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி திருவில்லிபுத்தூர் ஸ்டேட் பேங்க் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்பிஐ ஓய்வு சங்கத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். எஸ்பிஐ ஊழியர் சங்கத்தை சேர்ந்த சையத்அலி பாத்திமா, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் வைஸ்யா வங்கி செயலாளர் குமார், சிண்டிகேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் அருண், இந்தியன் வங்கி ஊழியர் சங்க செயலாளர் கார்த்திகேயன்,

இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்க தலைவர் ரங்கராஜன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் 20 சதவீதம் ஊதிய உயர்வு, வங்கித் துறையின் காலி இடங்களை நிரப்புதல், கார்ப்பரேட் கடன்களை வசூல் செய்ய உத்தரவிட கோருதல், வாரம் 5 நாள் வேலை, பென்சன் தொகை குடும்ப பென்சன் உயர்த்துதல், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்தல், வரையறுக்கப்பட்ட வேலை நேரம் உருவாக்குதல் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எஸ்பிஐ ஊழியர் சங்க செயலாளர் ரவி நன்றி கூறினார்.

Tags : Bank employees ,
× RELATED இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை...