×

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி

சிவகங்கை, பிப்.19:  சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 15வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் மனுவேல் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார். மைக்கேல் கல்விக்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தாளாளர் பிரிஜெட் நிர்மலா முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தாசில்தார் மைலாவதி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பிளஸ்1 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags :
× RELATED புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை...